search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசில் புகார்"

    • பீரோவை திறந்து நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அருகே மட்டதாரி கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 48), விவசாயி. இவரது மனைவி ராணிக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கடந்த மாதம் 24-ந் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்க்கப்பட்டார்.

    இதனால் தாமோதரன் விவசாய நிலத்தை கவினித்துக்கொண்டு வீட்டிற்கு சரிவர செல்லாமல் இருந்துள்ளார். ராணிக்கு சிகிச்சை முடித்து சில நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டின் பீரோவை திறந்து பார்க்கும் போது பீரோவில் வைத்திருந்த தங்க சங்கிலி, கம்மல், மோதிரம் உள்பட் 16 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தாமோதரன் ஆரணி தாலுகா போலீசில் புகார்செய்தார். அதில் நான் ஊரில் இல்லாததால் கள்ளச்சாவி போட்டு பீரோவை திறந்து நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெளியில் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை
    • போலீசார் தேடி வருகின்றனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பகுதியை சேர்ந்த விவசாயி. இவருடைய 16 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்- 2 படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த மாணவி அதிகாலை மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி உள்ளனர்.

    அவர் கிடைக்காததால் பிரம்மதேசம் போலீசில் புகார் அளித்தனர். இதேபோல் தூசி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய இளம்பெண் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 24-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து இளம் பெண்ணின் பெற்றோர் தூசி போலீசில் புகார் அளித்தனர். இந்த இரு சம்பவங்களின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவி, இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    • சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டது குறித்து விமர்சனம் செய்து பேசிய மந்திரி ரோஜா எதற்கெடுத்தாலும் சந்திரபாபு நாயுடு பூம்பூம் மாடு போல் தலையை ஆட்டுவதாக பேசியுள்ளார்.
    • மந்திரி ரோஜாவின் பேச்சுக்கு பூம்பூம் மாடு வளர்ப்போர் கண்டம் தெரிவித்துள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டது குறித்து விமர்சனம் செய்து பேசிய மந்திரி ரோஜா எதற்கெடுத்தாலும் சந்திரபாபு நாயுடு பூம்பூம் மாடு போல் தலையை ஆட்டுவதாக பேசியுள்ளார்.

    மந்திரி ரோஜாவின் இந்த பேச்சுக்கு பூம்பூம்மாடு வளர்ப்போர் கண்டம் தெரிவித்துள்ளனர்.

    அதன் சங்க மாநில தலைவர் தாசரி சத்தியம் மற்றும் தாசரி ஸ்ரீனு, முங்கி வெங்கடேஸ்வரராவ், தாசரி சின்னா, ராம்பாபு ஆகியோர் நந்தி கம போலீசில் மந்திரி ரோஜா மீது புகார் அளித்தனர்.

    அதில் எங்கள் குலத்தொழிலையும், எங்கள் சாதியை பற்றி இழிவாக பேசிய மந்திரி ரோஜா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி இருந்தனர்.

    இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பதை கண்டித்தார்
    • உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே பழைய ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 31). இவர் பக்கிரிதக்கா பகுதியில் உள்ள ஊது பத்தி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கு திருமணம் ஆகி ஷாமிலா (வயது 26) என்கின்ற மனைவியும் தியாஸ்ரீ (வயது 5), ஜெயசுகன் (வயது 1½) ஆகிய 2 குழந்தைகள் உள்ளன.

    அப்போது நேற்று முன்தினம் இரவு கார்த்திக் மனைவி வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பதை கண்டித்தார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை காணவில்லை.

    இதனால் கார்த்திக் தனது உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இதனால் கார்த்திக் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தாய் மற்றும் 2 குழந்தைகளை தேடி வருகின்றனர்.

    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த மேல குப்பம் கொள்ளை மேடுவை சேர்ந்தவர் கோபி (வயது 53). விவசாயி.

    கடந்த 2-ந் தேதி வீட்டில் இருந்தபோது விஷ குளவி கோபியை கொட்டி உள்ளது. வலியால் அலறி துடித்த அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கோபி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ரத்தினகிரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கோபி உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெங்கடேஷ் (வயது 54). இவர் ராசிபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.
    • அண்ணாதுரையின் மனைவி வெண்ணிலா கண்டக்டர் வெங்கடேசை தாக்கியதாக கூறப்படுகிறது.

    ராசிபுரம்:

    திருச்செங்கோடு அருகே உள்ள புள்ளாக் கவுண்டம்பட்டி சாணார்பாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 54). இவர் ராசிபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து காளிப்பட்டிக்கு சென்ற அரசு டவுன் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த பஸ்சில் ராசிபுரம் டவுன் வி.நகர் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை, அவரது மனைவி வெண்ணிலா(33) மகள் இசை ராணி(17) ஆகியோர் பயணம் செய்துள்ளனர்.

    அண்ணாதுரை பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்த தாக கூறப்படுகிறது. அதை பார்த்த கண்டக்டர் வெங்கடேஷ் அண்ணாதுரையை படிக்கட்டில் இருந்து உள்ளே வரும்படி அழைத்துள்ளார். உள்ளே வந்த அண்ணாதுரை கண்டக்டர் வெங்கடேஷ் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதைப் பார்த்த அண்ணாதுரையின் மனைவி வெண்ணிலா கண்டக்டர் வெங்கடேசை தாக்கியதாக கூறப்படுகிறது. இது பற்றி கண்டக்டர் வெங்கடேஷ் வெண்ணிலா மீது ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதேபோல் வெண்ணிலாவும் கண்டக்டர் வெங்கடேஷ் மீது புகார் அளித்தார்.

    இருதரப்பினரும் ராசிபுரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றனர். இரு தரப்பினரும் அளித்த புகார்களின் பேரில் போலீசார் தனித்தனியாக 2 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் கைது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் வாணியர் வீதியில் நேற்று ஒரு கோவில் திருவிழா வையொட்டிசாமி ஊர்வலம் நடந்தது. அப்போது வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 23) என்பவருக்கும், ஞானவேல் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதைப்பார்த்த அதேபகு தியை சேர்ந்த ராஜேஷ் (20), அரவிந்த் (21), கார்த்திகேயன் (29) ஆகியோர் தடுக்க சென்றதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சிவக்குமார் கத்தியை எடுத்து, ராஜேஷ், அரவிந்த் ஆகியோரை குத்தியதாக கூறப்படுகிறது.

    மேலும் கார்த்திகேயனையும் தாக்கி உள்ளார். காயமடைந்த அவர் கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர்.

    இது குறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கொலை மிரட்டல் விடுத்த தப்பி சென்றார்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பெரியகிராமம் பஜனைக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 58). இவர் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் அலுவலகத்திற்கு வந்து அலுவலகம் பணிகளை கவனித்தார். அப்போது மதிய வேலையில் அலுவலகத்திற்கு வந்த பெரியகிராமம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (36)லாரி டிரைவர். இவர் உதவியாளர் மாரிமுத்துவிடம் முன்விரோதம் காரணமாக தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆவேசம் அடைந்த லாரி டிரைவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாரிமுத்துவை வெட்ட முயன்றுள்ளார். இதனைப் பார்த்த உதவியாளர் மாரிமுத்து தடுத்து கத்தியை பிடுங்கி கிழே போட்டுள்ளார்.

    ஆனால் ஆவேசம் அடங்காத லாரி டிரைவர் மாரிமுத்துவின் இடது கையை பிடித்து கடித்து உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்த தப்பி சென்றார்.

    இதுதொடர்பாக உதவியாளர் மாரிமுத்து நேற்று இரவு காவேரிப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தன் கைப்பையில் வைத்திருந்த 3 ஏ.டி.எம். கார்டுகளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • தாமதமாக கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கீதா, இது குறித்து, திருநள்ளாறு போலீசில் புகார் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு கமலாம்பாள் வீதியைச்சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி சங்கீதா (வயது 37). இவர், கடந்த 10-ந் தேதி கும்பகோணத்திற்கு பஸ்சில் சென்று விட்டு, அன்று மாலை திருநள்ளாறு திரும்பி கொண்டிருந்தார். வீடு சென்று பார்த்தபோது, தன் கைப்பையில் வைத்திருந்த 3 ஏ.டி.எம். கார்டுகளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தொடர்ந்து, குறிப்பிட்ட வங்கிக்கு சங்கீதா சென்று கார்டை பிளாக் செய்ய சொல்லியதாக கூறப்படுகிறது. ஆனால், அன்றைய தினமே, ரூ.40 ஆயிரம், 11-ந் தேதி ரூ.40 ஆயிரம், 12-ந் தேதி ரூ.40 ஆயிரம், 13-ந் தேதி ரூ.40 ஆயிரம் என 4 நாட்கள் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணம் எடுத்ததாக சங்கீதாவின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை தாமதமாக கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கீதா, இது குறித்து, திருநள்ளாறு போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனில் கபூருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டது.
    • சிகிச்சையில் இருந்த அனில் கபூர் ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அம்பேத்கார் காலனியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது இரட்டை மகன்கள் அஜித்கபூர் (வயது 28) மற்றும் அனில் கபூர் (28). இதில் அஜித்கபூர் சென்னை ஆவடி பட்டாலியனில் காவலராக பணிபுரிந்து வருகிறார். மற்றொருவரான அனில் கபூர் சென்னை மவுண்ட் ஆயுதப்படையில் போலீஸ்காரராக கடந்த 2018ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார்.

    அனில் கபூருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் விடுப்பு எடுத்துக் கொண்டு தனது சொந்த ஊரான லோயர் கேம்ப்க்கு வந்தார். அவரை தந்தை அழகர்சாமி கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்.

    சிகிச்சையில் இருந்த அனில் கபூர் ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை குமுளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனது மகனுக்கு எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லை என்றும் அவர் எவ்வாறு இறந்தார்? என உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போக்சோவில் டியூசன் மாஸ்டர் கைது
    • ஜெயிலில் அடைப்பு

    வேலூர்:

    வேலூர் அடுத்த தொரப்பாடியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த மீர் பஹார் அலி (வயது 53). என்பவரிடம் மாணவி டியூஷன் படித்து வந்தார்.

    இந்த நிலையில் டியூஷனுக்கு வந்த மாணவியிடம் மீர் பஹார் அலி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இது குறித்து சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து சிறுமியின் பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் வாசுகி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து மீர் பஹார் அலியை கைது செய்து ஜெயிலில் அடைத்தார்.

    • மர்ம நபர் கைவரிசை
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த மழையூர் கூட்டு சாலையை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 55). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக உள்ளார். இந்த நிலையில் அவர் கோவிலில் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலில் இருந்து வெளியே வந்தார்.

    அப்போது மர்ம நபர் ஒருவர் மகாதேவனின் கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதுகுறித்து மகாதேவன் வட வணக்கம் பாடி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    ×